| |

என் காதல் தீரா – 02

தீரா – 02

வாகனத்தின் ஏர் பிரெஷ்னேர் வாசத்துடன் அவனுக்கே உரித்தான வாசம் அவள் நாசியை நெருட, அவன் மேல் விழுந்த வேகத்தில் அவன் மார்பின் திண்மையை அவள் உணர அவள் மேனியின் மென்மையை அவன் உணர்ந்தான். அவசரமாக எழ முயன்றவளை அசையவிடாமல் இறுக்கியது அவன் வலுவான கரம். அவள் அவனிடமிருந்து விடுபட நெளிய அப்படியே கீழே தள்ளி அவள் மேல் கவிழ்ந்தவன் “சும்மா நெளியாம இருடி என்னென்னமோ செய்யுது”

“என்ன செய்யுது கௌதம்” கண்ணில் குழப்பம் படர கேட்டாள்.

“இப்படியே குழந்தை மாதிரி விழி, கடிச்சு வைக்கிறேன்” அவள் உதட்டை கடிப்பது போல் பாவ்லா செய்தான்.

“ஐயே… அது எச்சி” சிறு குழந்தையாய் முகம் சுளித்தாள்.

அவள் குழந்தைதனத்தில் சிரித்தவன் “உன் பாடு கஷ்டம்டா கௌதம்” தன்னைதானே ஆறுதல்படுத்தினான். அதற்கும் விழித்து கொண்டிருந்தவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்ட அவளோ அவனை வேற்று கிரகவாசியை போல் பார்த்து வைத்தாள்.

“என்ன இது எல்லோரும் பார்ப்பாங்க போகனும் விடுங்க” விடுபட நெளிந்தாள்.

ஒரு கால் மடித்து மல்லாந்து படுத்தவன் அவளை இழுத்து தன்மேல் போட்டு “ஒருவரும் நம்மை பார்க்கவும் முடியாது நாமும் எங்கேயும் போகவும் முடியாது சுற்றி பார்” என்றான். இருதரம் அவன மார்பில் புரண்டு திரும்பி திரும்பி பார்க்க துடித்த கைகளை அடக்கி தலையின் பின்னே கோர்த்தான்.

அவள் பாடும் போதே மாலை மயங்கி கொண்டிருந்தது. இப்போது பார்க்க சுற்றிலும் இருள் பரவி தூரத்தில் அந்திவானத்தில் சின்னஞ் சிறு பொட்டாய் சிகப்பு மட்டும் மிச்சம் இருந்தது. மீதி இடம் இருளில் மூழ்கி இருக்க லைட் கூட ஒளிரவில்லை. சத்தத்தை வைத்து மழை பெய்ததை உணர்ந்தவள் உடல் இறுக அவன் டீ ஷர்டை இறுக பிடித்தாள். அவர்கள் இருவருமே நிழலுருவமாய் தெரிந்தனர்.

சிறு வயதிலிருந்தே மழையும் இருளும் என்றால் பயம். அவள் வாழ்வில் நடந்த சில விரும்பாத நிகழ்வுகளின் போதெல்லாம் மழை தன் பங்களிப்பை செய்ய அவளுக்கு அது நிரந்தர பயமாகவே ஆகிவிட்டது. யாரும் ‘பயப்படாதே’ என ஆறுதல் கூறவும் இல்லை ‘நானிருக்கின்றேன்’ என்று அணைக்கவும் இல்லை எனவே இத்தனை காலம் தனியாகவே வாழ்ந்த போதும் பயம் மட்டும் மட்டுப்படவில்லை. மாறாக அதிகரித்துவிட்டது. அது போன்ற சமயங்களில் கைகளால் உடலை இறுக கட்டிக் கொண்டு மூலையில் அமர்ந்துவிடுவாள். இது போன்ற நேரங்களில் விடிய விடிய உறங்காமல் விழித்து வெளிச்சம் வந்த பின் உறங்கிய நாட்கள் தான் அதிகம்.

அருகே ஒருவன் இருந்தாலும் பழகிய பழக்கம் மாறாது என்பது போல அவனை விட்டு விலகி கைகளை கட்டி தன்னை தானே குறுக்கி கொண்டாள்.

தன் மீதிருந்த அவளின் மலர் பாரம் குறைய சற்று எம்பி குனிந்து பார்த்தான். அருகே அவள் குறுகி படுத்திருப்பது வரி வடிவமாய் தெரிய “என்னாச்சு” என்றவனுக்கு பதிலில்லை. ஆனால் அவள் நடுங்குவது புரிய வேகமாக போன் லைட்டை ஒளிர செய்து பார்த்தான்.

குறுகி படுத்திருந்தவள் முகம் பயத்தை பிரதிபலிக்க நெற்றி சுருக்கியவன் ‘மடையா இதை எப்படி மறந்தாய்?’ தன்னைதானே திட்டியவாறே எழுந்து அமர்ந்து சிறிதும் யோசிக்காமல் சட்டென இழுத்து மடியில் போட்டு நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

“ஷ் பயப்பட கூடாது நான் இருக்கிறேன் இல்ல” ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொல்ல அவளோ அவனுள் புதைந்து விடுவாள் போல் அவனுடன் ஒன்றினாள்.

“ஸ்ரீனிகா…” மென்மையாய் அவள் பெயரை காதுக்குள் அழைத்தான் “ஸ்ரீனி..”

“ஹ்ம்ம்” 

“ஸ்ரீனி… நல்ல பொண்ணுதானே” குழந்தையிடம் பேசுவது போல் பேசினான். 

“ஹ்ம்ம்…”

“என்னிடம் பேசுவாங்க தானே..”

“எ எ என்ன பே பேச” பயத்தில் நாக்கு இறுகி போனது போல் வார்தை இடறியது.

“ஸ்ரீனி எப்ப கேரளா போக போறா?”

“நா நா நாளைக்கு” நடுங்கினாள்.

“சரி சரி நான் இங்கே தான் இருக்கிறன்” என்றவன் தலை தோள் கை என்று மென்மையாக வருடி கொடுத்தான். “எத்தனை மணிக்கு”

“நாலு…. மோர்னிங் நாலு மணிக்கு”

“ஹ்ம்ம் கேரளாவில் எங்கே போறா”

“ஹ்ம்ம் திருவனந்தபுரம்..” அவன் குரலில் என்ன மாயமோ அவனுடன் பேசப்பேச மெதுவே பயம் குறைந்தது. அவன் வருடலில் உடலில் ஏற்பட்ட இறுக்கம் தளர அவன் மென்மையான தொடுகையில் பயம் மாயமாவதை என்றும் போல் ஆச்சரியத்துடன் உணர்ந்தாள். அவன் இதய துடிப்பின் ஓசை மெல்லிய சங்கீதமாய் அவள் காதருகே ஒலிக்க பல நாட்களாக அவளை வெறுத்து நின்ற நித்திராதேவி அணைத்து கொள்ள மெதுவே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

“எதுக்கு….”

பதிலின்றி போக குனிந்து பார்த்தான். சிப்பி இமைகள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அந்த குளிரிலும் பயத்தில் குறு வியர்வை பூத்த நெற்றியை அவள் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து துடைத்து விட்டான். குளிருக்கு இதமாக அவனோடு இன்னும் ஒன்றினாள். அவள் செய்கையில் புன்முறுவல் எழ சுற்றி பார்த்தவனுக்கு மழை விட சற்று நேரமாகும் போல் தோன்றவே அவளை எழுப்பி அழைத்து செல்ல கன்னத்தை தட்ட போனவன் கை பாதியில் நின்றது. போன் வெளிச்சத்தில் குழந்தை போல் உதடு பிதுக்கி உறங்கியவளை எழுப்ப மனம் வரவில்லை.

அவன் ஐபோனை எடுத்து பார்த்தான் அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மழை என்று போட்டிருக்க சிறிது யோசித்தவன் முழுதாக அவளை தூக்கி தன் மேல் போட்டு கொண்டான்.

அவளுக்கு மெத்தை மேல் படுத்து போல் குளிருக்கு இதமாக இருக்க புரள பார்க்க ஒரு கையால் விழுந்து விடாமல் பிடித்து கொண்டான். ‘நான் சும்மா இருந்தாலும் இவள் இருக்க விட மாட்டாள் போலயே’ மனதோடு புலம்பியவன் “சும்மா இருடி இம்சை… இல்ல நிலத்தில் தள்ளிவிடுவேன்” செல்லமாய் மிரட்டினான்.

*****

அடுத்த நாள் காலை குருவியின் கீச்கீச் சத்தத்தில் எழுந்தவள் உதடுகளில் நீண்ட நாட்களின் பின்னர் புன்னகை பூத்திருந்தது. குளிருக்கு இதமாய் இருந்த கம்பளியை விட்டு வெளிவர மனமின்றி தலையணையை கட்டிக் கொண்டாள். ஆனால் வழமை போல் இல்லாமல் தலையணை திண்னெண்று இதமான கததப்புடன் இருக்க கண் திறக்க மனமின்றி தடவி பார்க்க முடி அகப்பட்டது. “ஐ கரடி பொம்மை” என்று சிரித்தாள். உன்னிடம் எப்போது கரடி பொம்மை இருந்தது அதுவும் இந்த சைசில் அப்பொழுது தான் விழித்த மூளை கேட்க சட்டென எழுந்து அமர்ந்தாள்.

கெளதம் சிரிப்பை அடக்கியபடி அவளையே பார்த்திருந்தான். அவளுக்கு முன்பாகவே எழுந்திருந்தவன் தன் மார்பில் குழந்தை போல் ஆழ்ந்து உறங்கும் அவளை எழுப்ப மனமின்றி படுத்திருந்தான். எத்தனை நாள் உறக்கமின்றி ஒரு ஆறுதல் வார்த்தைக்கு ஏங்கியிருந்தால் அப்படி சில கணங்களில் அடித்து போட்டது போல் உறங்கியிருப்பாள். அவள் தலையை வருடியவனுக்கு நேற்று அவளை கைகளில் அள்ளி வந்தது நினைவில் வந்தது.

*****

சற்று நேரத்தில் மழை நிற்க ஷாலை அவள் தலையை சுற்றிப் போட்டவன் பூ போல கைகளில் அள்ளிக் கொண்டு தூறலில் நனையாமல் குழந்தையை தோளில் தூக்குவது போல் தன் கழுத்து வளைவில் அவள் முகத்தை வைத்து அங்கிருந்து சில நிமிட நடையில் இருந்த தோட்ட வீட்டிற்கு சென்றான். பின்னாலேயே வேலன் குடையையும் பிடித்து வந்தார். மாடிக்கு ஏறி செல்வதற்குள் தொப்பலாக நனைந்துவிடும் அபாயம் இருந்தது. அதோடு அவள் பிடிவாதக்காரி, ஏன் இங்கே அழைத்து வந்தீர்கள் என்று கேட்டாலும் கேட்பாள்.

பெட்டில் விட்டு குளிக்க சென்றவன் சட்டையை இறுக பிடித்து “போக வேண்டாம்” சிணுங்கினாள். “பிரஷாகி வரேன்” என்றவன் மடியில் கன்னம் பிதுங்க இன்னும் ஒட்டிக் கொண்டாள். ஒருவாறு அவளிடமிருந்து விடுபட்டு குளித்து வந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்கவே போய் திறந்தான்.

வேலன்தான் இருவரது உடைகள் ப்ளஸ் பால் கோப்பையுடன் நின்றார் “தம்பி பாப்பா காலையிலிருந்து எதுவும் சாப்பிட குடிக்கல… இன்று பார்த்து வள்ளியும் இல்லை… அவளாவது ஏதோ மிரட்டி ஒரு வாய் உள்ளே போகும் இதையாவது குடிக்க வையுங்கள்”

கௌதமன் இமை வெட்டாமல் அவரையே பார்த்திருந்தான்.

“நான் வயசானவன் ஏதோ எனக்கு சரி என்று பட்டதை சொல்றன். நேற்று தலைக்கு ஊத்தின பிள்ளை மூன்று நாளாக பச்சை பட்டினி உடம்பு என்னத்துக்கு ஆகும். வந்த பத்து மாதத்தில் பாதி உடம்பு தான் இருக்கு… அதுவும் இந்த பத்து நாளும் அழுதே கரையுது இந்த பெண்… ” புலம்பியவாறே உள்ளே வந்து பாலை உள்ளே வைத்தவர் அவள் அறையை எட்டி பார்க்க அவள் உறங்குவதை பார்த்து “ஏதோ இன்றாவது தூங்குது இல்லாட்டி பேய் மாதிரில்ல தோட்டம் முழுக்க திரியும்” வாய்க்குள் புலம்பியபடி வெளியே சென்றார்.

பாலை எடுத்து வந்து உள்ளே வைத்தவன் சிலைபோல் உணர்ச்சியற்று கட்டிலில் அமர்ந்தான். மெத்தையில் அமர்ந்தால் கட்டிலின் சட்டத்தில் அமர்ந்ததை போல் இருந்தது. அவன் வீட்டின் வேலைக்காரர்களுக்கு கூட நல்ல மெத்தை உண்டு.

அசைவில் அவள் திரும்பி படுக்க அவளை பார்த்தான் முதல்முறை அவளை பார்த்த நினைவு வந்தது. குழந்தைத்தனமான சிரிப்புடன் புசுபுசுவென்று கன்னங்களும் கனவு நிறைந்த விழிகளுமாய் சற்று பூசினால் போல் இருந்தவள் இப்போது வெறும் எலும்பு கூடு மட்டும் தான் மிச்சம். அதிலும் இந்தப் பதின்னான்கு நாளில் இன்னும் பாதியாகியிருந்தாள். கட்டிலருகே இருந்த சிறு மேசையில் இருந்த பாலை பார்த்ததும் அவள் குடிக்க வேண்டுமென்று நினைவு வர அவளை எழுப்பினான். எழுந்தவள் அவன் மேல் விழுந்து விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.

“இந்த பாலை குடிம்மா.. ஸ்ரீனி” கன்னத்தை தட்டி எழுப்பினான்.

உறக்கத்தில் அரைக்கண் விழித்து பார்த்தவள் “ஐ நல்ல கனவு” சிரிப்புடன் மீண்டும் விழி மூடினாள்.

“எதும்மா நல்ல கனவு” பதில் தன் இதயத்தை குத்தி கிழிக்கும் என்று தெரிந்தே கேட்டான்.

“அதுவா கௌதம் என்னை காதலித்த கெளதம்” வேகமாக மறுத்து தலையாட்டி திருத்தினாள் “என்னை காதலித்தது போல் பொய்யாய் நடித்த கௌதம்…. இல்லையே அதுவும் இல்லை இல்லையா? அதுவும் என்னோட கற்பனைதானே” சிரித்தாள் அதில் உயிர்ப்பில்லை.

அவன் கண்களில் இருந்து வழிந்த ஒரு துளி கண்ணீர் அவள் கன்னத்தில் விழ “ஈரம்….” துடைத்தாள்.

சட்டென சுதாரித்தவன் “முதலில் இந்த பாலை குடி” அவளுடன் போராடி ஒரு கிளாஸ் பாலை அவள் வயிற்றினுள் அனுப்பி வைக்க அவளோ அரைகுறை உறக்கத்தில் கனவு என்று அவன் முகத்தையே ஆசையாய் பார்த்திருந்தாள்.

அவள் பார்வையை தாங்க முடியாமால் “இந்த கௌதம் நிஜமாகவே உன்னை காதலிக்கின்றான் தெரியுமா உனக்கு” இரு கன்னங்களையும் இறுக பிடித்து கேட்டான். சோபையாய் புன்னகைத்தவள் ஒற்றை வார்தையில் மறுத்தாள் “பொய்…” பின் அவளே தொடர்ந்தாள் “அவனுக்கு தேவையான ஏதோ என்னிடம் இருக்கு அன்று கூட சொன்னான்…. நான் தான் அதிர்ச்சியில் சரியா கவனிக்கல…. ஞாபகம் வரவே மாட்டேங்குது… நிஷா.. ஆள் அல  ஏதோ மில் சம்பந்தமான சொத்து… பச்… நினைவில் இல்லை என்னிடம்தான் எதுவுமில்லையே… பின் எதுக்கு கல்யாணம்…  நீ கேட்டு என் கனவில் வந்து சொல்லு…. என்னிடம் இருந்தால் அவனுக்கு கொடுத்துறான்” கொஞ்சலாய் கூறியவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“எதை கேட்டாலும் கொடுப்பாயா…..?” தொண்டை அடைக்க கேட்டான்.

“ஹ்ம் தெரிந்தால் கொடுத்துட்டு போயிறலாம்” ஆயாசத்துடன் கூறினாள்.

“கொடுத்தால் போய் விடுவாயா….?” ஏனோ அவன் குரல் கரகரத்தது.

“இல்லாவிட்டாலும் போகதானே வேனும்” வெறுமையாய் கூறினாள்.

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவள் தலையை வருடிக் கொண்டிருந்தான்.

கௌதமனுக்கு ஏதோ தோன்ற “இது உன் கனவு தானே அப்ப நீ எது வேண்டும் என்றாலும் நினைக்கலாம்தானே, இந்த கௌதம் நிஜமாகவே உன்னை காதலிக்கின்றான் தெரியுமா?” அவள் ஆழ்மனதில் பதியவைக்க முயன்றான்.

“கனவுக்கும் ஒரு எல்லையுண்டு இல்லையா… இதுவும் அவன் தான்…” அவள் குரல் மெதுவே தேய்ந்தது. ‘கனவுக்கும் ஒரு எல்லையுண்டு மிஸ் ஸ்ரீனிகா’ அவனது அதே வார்தை அவன் இதயத்தையே சில்லு சில்லாக நொறுக்கிவிட்டது.

இதயத்தின் வலியில் அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட “இந்த கனவும் வேண்டாம் நிஜத்தில் கஷ்டம்” சிணுங்கி விலகி படுத்தாள்.

கனவிற்கு கூட இறுகி போய் இருப்பவளை என்ன செய்ய என்று தெரியாமால் விழித்தான் கௌதம். தான் செய்த தவற்றின் பரிமாணம் எழுந்து நின்ற உயரத்தில் எப்படி சரி செய்ய என புரியாமல் கௌதம் அயர்ந்துவிட்டான். அதன்பின் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட கௌதம் சோர்ந்து போன அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அவனருகே இருந்தவளை அணைத்துக் கொண்ட நித்திராதேவி அவனை திரும்பியும் பார்க்கமாட்டேன் என்று விட்டாள்.

*****

அவளோ பயத்துடன் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு பழக்கம் உறக்கத்தில் யார் எதை கேட்டாலும் உளறி விடுவாள். இரவு உறக்கத்தில் அவன் என்னவெல்லாம் கேட்டானோ எதையெல்லாம் உளறித் தொலைத்தாயோ என்று தெரியலையே அவள் மூளை கூற கௌதமை பார்த்து விழித்தாள்.

“என்ன பார்வை, அழகா இருக்கேனா?” கண்ணடித்தான் அவன். அவள் உறைந்து போய் நிற்க அவனே கேலியாக கேட்டான் “இதுதான் நீ நாலு மணிக்கு போகும் இலட்சணமா?” அதற்கும் விழித்து கொண்டு நின்றவளை பார்த்து “பன்னிரண்டு மணிக்கு பிளைட் இப்பவே நேரம் எட்டு முப்பது, சீக்கிரம் தயாராகு” விரட்டினான்.

அவளோ திரும்பி திரும்பி பார்த்தவாறு குளியலறைக்குச் சென்றாள்.

அடுத்த நாள் திருவனந்தபுரம் கடற்கரையில் இன்று உருகிய அவனே இறுகி மீண்டும் ருத்ரரூபம் கொள்ள வைத்த செயலை செய்தாள். அவள் செய்த செயலில் அதிர்ச்சியாகி ஓங்கி கன்னத்தில் அடித்தவன் அவனையும் மீறி கண்ணில் நீர் சுரக்க கேட்டான் “பெண்ணாடி நீ….” மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.

Similar Posts

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 11

    மொழி  – 11 ஊரடங்கு சட்டம் முடிய மகன்கள் மட்டும் போய் பழுதடைந்திருந்த அவரின் உடலுக்கு இறுதிக் காரியங்களை நடத்தி வந்திருந்தார்கள். அதன் பின்தான் மனிதர்களின் சுயரூபம் அவனுக்கு தெரியும் நாளும் வந்தது. அவன் ஐந்து மாமாக்களும் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் விட அவனைக் கொண்டாடியதில் வெறுப்பில் இருந்தவர்கள் சமயம் பார்த்து தந்தை வழிச் சொத்துகளை பிரித்து எடுத்துக் கொண்டனர். பாலநாதனின் கருணையில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தப்பிப் பிழைத்தது. இத்தனை நாட்கள் அம்மாவிடம் கனிவாய்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 22

    மொழி  – 22 “என்ன லக்கிக்கா” என்று பின் தங்கி நின்ற இலக்கியாவை விசாரித்தாள் கவிதா. “இல்ல, அந்த ஜானகி எங்கேயோ பார்த்த மாதிரி, அதான் எங்கே என்று யோசிக்கிறேன்” என்றாள் அரைகுறை கவனத்துடன். “இங்கே எப்படி பார்த்திருக்க முடியும்? அவையள் தான் இங்கே வந்ததேயில்லையே” “லக்கி” மேற் கொண்டு உரையாடல் செல்வதற்குள் உள்ளிருந்து கண்மணி அவர்களை அழைக்கவே இருவரும் உள்ளே சென்றார்கள். வீட்டிலேயே மத்தியான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க மணமக்களை அலங்கரித்த சோபாவில் இருத்தி…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 01

    அந்தக் கம்பனியின் ஐந்து மாடிகட்டிடத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றுதான் அந்த நிறுவனத்தின் புது முதலாளி பொறுப்பேற்க வருகின்றான். அனைத்தும் சுத்தமாகவும் டிசிப்ளினாகவும் இருக்க வேண்டும். அதோடு கொஞ்சம் கோபக்காரன் என்றும் கதை. அனைவரும் வாசலில் பூங்கொத்துடன் நிற்க ஒருத்தி மட்டும் தன் வேலைகளை கர்மசிரத்தையாய் செய்து கொண்டிருந்தாள். சரியாய் சொன்ன நேரத்திற்கு உள்ளே நுழைந்தது அவனின் கருப்பு நிற மெர்சிடிஸ்- மாய்ப எக்ஸ்லெரோ (Mercedes-Maybach Exelero). உள்ளேயிருந்து இறங்கினான் ஒருவன். கருநீல வெஸ்ட்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 12

    மொழி  – 12 “ஏஏய் உஉனக்கு எஎப்படி?” தடுமாறினார். “இங்கே வந்து ஆறாவது மாதமே உங்களின் சாயம் வெளுத்துவிட்டது. பெயர் கூட பொய்யில்லையா? சீ உங்களுக்காக என் அண்ணகளை எதிர்த்து… சாகும் வரை அப்பாவை நிம்மதியில்லாமால்….” பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவள் “அதுதான் அன்றே நீங்கள் கட்டிய தாலியை தந்து விட்டேனே, இப்போது என்ன?” கறாராகவே கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் பாலா. அன்று அங்கே என்ன நடந்தது என்று என்ன கேட்டும் அவள் சொல்லவில்லை. “என்னை மன்னிச்சிரு….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி 23

    மொழி  – 23 மூன்றாம் பிறை எங்கோ ஒளிந்து கொள்ள இலகுவான பருத்தி த்ரீ குவட்டர் டீசேர்ட்டில் நட்சத்திர வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் யதி. இரவு நேரத்தின் குளிர்ந்த தென்றல் உடலை தழுவிச் செல்ல மெதுவாய் சிலிர்த்தாள். சற்று முன்தான் கவிதா லக்கி இருவரும் அலங்காரத்தை கலைத்து தலை காய வைக்க உதவி செய்து சென்றிருந்தார்கள். புது பெண்ணிற்கான எதிர்பார்ப்பு, தயக்கம், நாணம் என்று இல்லாத போதும் மனதின் ஓரம் ஏதோவொரு மெல்லிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 02

    கழுத்துக்கு கீழ் வரை போர்த்தியிருந்த போர்வையை கைகளால் பிடித்தபடியே புரண்டு படுக்க, அருகே அவன் படுத்திருந்த இடம் மெல்லிய கதகதப்புடன் காலியாய் இருந்தது. சோர்வுடன் நிமிர்ந்து பார்க்க டவலை மட்டும் இடையில் அணிந்து வெறும் மேலில் நீர்த்துளிகள் மின்ன சுவற்றிக்கு பதில் கண்ணாடி பதிக்கபட்ட ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன். அவன் முதுகில் இருந்த சிவந்த கோடுகள் அவர்கள் இருவரும் சற்று முன் இருந்த இரண்டறக் கலந்த நிலையை தெளிவாக எடுத்துரைக்க கன்னங்கள் சிவப்பேற…

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன