இதயம் தேடும் அவள் மொழி – 26

மொழி – 26

“தொழிலதிபர் யோகேந்திரனை கொலை செய்தது ஜி எம் எஸ் என்று அழைக்கபடும் ஞான மந்திர சொரூபனா”

“தொழிலதிபர் கொலை வழக்கில் இலங்கையை சேர்ந்த லண்டன் வாழ் தமிழர், என்ன தொடர்பு? 

 நீதிமன்றின் வாசலில் ஒரு பெண் நிருபர் மைக்கில் சொல்லிக் கொண்டிருக்க பின்னணியில் நீதிமன்ற படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டிருந்தான் சொரூபன். 

வாசலுக்கு வரவும் சுற்றிலும் மீடியா மொய்த்து விட அவனின் செக்யூரிட்டி கார்ட்ஸ்சை மீறி ஒருவர் கூட நெருங்க முடியவில்லை. முகம் முழுதும் தாடியும் சிவந்த கண்களை மறைத்திருந்த கருப்பு கண்ணாடியுமாய், அவன்தான் சொரூபன் என்பதை சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். அப்படி மாறி போயிருந்தான். 

உள்ளே ஏறியதுமே “ஜெகதீஷ்” அவன் அழைப்பே கேள்வியாய் ஒலித்தது. ட்ரைவிங் சீட்டில் அமர்ந்திருந்தவன் பதிலின்றி உதட்டைக் கடித்தான்.

உடல் எஃகாய் இறுக வெளியே நோக்கினான் சொரூபன். அவன் மனதைப் போலவே கருப்புக் கண்ணாடியின் வழியே  வெளியே தெரிந்த வானமும் இருண்டிருந்தது. 

சரியாய் ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து இந்தியா வந்திறங்கியதும் அதன் பின்னர் நடந்ததும் மனதில் படமாய் ஓட சீட்டில் தலையை சரித்தவன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் சூடாய் காதில் நுழைந்தது.

******

வேன் கொழும்பை நோக்கி சென்று கொண்டிருக்க அருகே இருந்த யதீந்திராவை பார்த்து பரிவுடன் கேட்டான். 

“சத்தி வரும் போல் இருக்கா? வயிற்றை பிரட்டுதா?” 

“இல்ல நீங்க தந்த சத்தி குழுசையில் நின்றுட்டு” என்றவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான். ஏனென்று தெரியாமல் மனமும் உடலும் நடுங்க அவள் ஸ்பரிசம் மட்டுமே ஆறுதலாய் இருந்தது. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் புஜத்தில் கன்னத்தை அழுத்திக் கொண்டாள். 

******

அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கண்மணி, பாலா, சொரூபன், நிஷாந்த என அனைவரும் ஜெகதீஸ் கொண்டு வந்திருந்த லான்ட் குருசியரில் ஏறி அமர்ந்து, ‘எங்கே’ என்பது போல் யதிந்தீராவை பார்த்தார்கள். 

“உங்கள் வீட்டுக்குதான்” என்றாள் மெல்லிய புன்னகையுடன். அவள் உள்ளமும் ஏனோ அமைதியின்றி தவித்தது. 

“அம்மா எங்கே?” பொறுமையை இழுத்து பிடித்தபடி கேட்டான் சொரூபன் 

“அவர்கள் உங்கள் வீட்டில் இருக்கின்றார்கள்” 

“அங்கே எப்படி?” புருவத்தை உயர்த்தினான். 

“நான்தான் கூட்டிட்டு வர சொன்னேன்” என்றவள் நெற்றியில் வியர்வை அரும்பியது. 

மறு பேச்சின்றி ஜெகதீஸ் சொரூபன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். 

பயணம் முழுதும் அமைதியின்றி இருந்ததை கவனித்தவன் யதியிடம் திரும்பி அவளை கூர்ந்து பார்த்துக் கேட்டான் “என்னிடம் எதையாவது மறைக்கிறீரா?” 

இப்போது நிஷாந்தவும் லேசான பதட்டத்துடன் திரும்பி யதியை பார்த்தான். 

அடுத்த கேள்வி கேட்பதற்கு “வீடு வந்திட்டு” என்று முன்னே கை காட்டினாள் யதி.

அனைவரும் இறங்கி முன்னே செல்ல அவள் புஜத்தை பிடித்து நிறுத்தினான் சொரூபன். அவள் கண்களையே கூர்ந்து பார்த்தவனுக்கு என்ன விடை கிடைத்ததோ முகம் வெளுக்க சோர்வுடன் தளர்ந்து போய் உள் நோக்கி நடந்தான்.

பின் தங்கி நின்ற நிஷாந்தவை பார்த்து உதட்டை பிதுக்கினாள் யதி.  

இன்னொரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கினார்கள் ஜானகியும் டிரைவர் அங்கிளும். 

“இந்திரா” ஆரவார கூச்சலுடன் ஆர்வமாய் ஓடி வந்தவள் அவளையே இமைக்கமால் நோக்கிய நிஷாந்தவை கண்டு தயங்கி நின்றாள். 

அவளின் தயக்கத்தில் உதட்டைக் கடித்த நிஷாந்த, ஜானகியின் மீதிருந்த பார்வையை அகற்றாமல் “நங்கி உள்ளே போங்க, நான் இவாவுடன் கொஞ்சம் கதைச்சிட்டு வாரேன்” என்றான் யதியிடம். 

அவளுக்கும் சற்று தயக்கமாய்தான் இருந்தது. ஆனால் சொரூபன் உள்ளே தனியாய் போயிருந்தான். அவனை சமாளிக்க வேண்டும். அதற்கும் மேல் இவளும் இப்போது உள்ளே வந்தால்… 

தலை வெடிக்கும் போலிருக்க நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டவள் “இவளை சற்று நேரம் கழித்தே உள்ளே அழைத்து வாருங்கள்” என்றாள் நிஷாந்தாவிடம். 

அவள் குரலில் பார்வையை திருப்பியவன் சோர்ந்திருந்த அவள் முகத்தைப் நோக்கி கருணையுடன் கேட்டான் “எவ்வளவு தூரம் மறைக்க முடியும் நங்கி?”. 

அவளுக்குமே புரிந்துதான் இருந்தது. குழப்பம் தெளியாமல் அவனிடம் தலையாட்டியவள் உள்ளே சென்றாள். அவளது பொய் எவ்வளவு நேரம் தாங்கும் என்று அவளுக்கே தெரியவில்லை.

திரும்பி ஜானகியை பார்த்தான் நிஷாந்த. இத்தனை நாளில் ஆயிரம் தடவை கோல் எடுத்து இருப்பான். ஒன்றுக்கு கூட பதிலளிக்கவில்லை. மார்புக்கு குறுக்கே கை கட்டி அவளை அழுத்தமாய் பார்த்தான். 

‘போடா’ என்பது போல் கழுத்தை வெட்டினாள் அவள். 

குழந்தை போல் அடத்துடன் திரும்பி நின்றவளைப் பார்த்தவன் முகம் குழப்பம் புன்னகை இரண்டையும் ஒன்றாய் தத்தெடுக்க ஒரு எட்டு வைத்து கைகளுக்குள் அள்ளிக் கொண்டவன், அவள் தலையை மார்பில் அழுத்தி சற்றுக் குனிந்து காதுக்குள் சொன்னான் “ஐயாம் சொரி, மம ஒயட்ட ஆதரே கரன்ணவ, ஐயாம் ரியல்லி சொறி”. 

“அது என்ன கரண்டி” என்ற ஜானகி அவனிடமிருந்து விடுபட போராடினாள். 

இலகுவாய் அதை முறியடித்து மீண்டும் கைகளுள் கொண்டு வந்தவன் சிறு சிரிப்புடன் “அது கரண்டி இல்ல. நீயே கண்டுபிடி. அண்டைக்கு உன் அண்ணன் முக்கியமான வேலை ஒன்று தந்திருந்தான். நானும் பயணத்தில் டயர்ட், சொரிமா” ஜிஎம்எஸ் குரூப்ஸ் ஓப் கொம்பனியில் ஞான மந்திர சொரூபனுக்கு இணையாய் இருக்கும் அவன் சிறு பெண்ணிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

அவளிடம் அன்றிருந்த அந்நிய தன்மை விலகியிருக்க அதுவே நிசாந்தவுக்கு பெரு நிம்மதியைக் கொடுத்தது. இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் மணித்தியாலக் கணக்கில் ஜானகியுடன் பேசி அவளை சரி செய்த யதீந்திராவுக்கு மனதார நன்றி சொன்னான். 

மீண்டும் அவனை தள்ளி விட முயற்சிக்கவே அவள் முகத்தை கைகளில் ஏந்தி “அதுதான் சொறி சொல்றேன் இல்ல. இப்படி அடம் பிடித்தால் எப்படி? பிறகு நேரே லிப் டூ லிப் கிஸ்தான்” என்றான் மிரட்டலாய். 

அவன் மிரட்டலில் வாயை இரண்டு கையாளும் பொத்தி கண்ணை விரித்து பார்த்தாள் ஜானகி. 

அவள் செயலில் அவன் சிவந்த இதழ்களில் லேசாய் முறுவல் அரும்பியது. அவளை விட்டு யாழ்ப்பாணத்தில் நின்ற இந்த பதினைந்து நாளில் அவள் மீதான தன் நேசத்தின் ஆழம் அவனுக்கு விளங்கியிருந்தது. இனி எதற்காகவும் யாருக்காகவும் அவளை விட்டு இருக்க முடியும் போல் தோன்றவில்லை.

“அ..யா ..” 

“ஹா..” அவள் கூறியது விளங்காமல் சற்றுக் குனிந்து கேட்டான். 

“அண்ணா யாரு?” 

அத்தனை நேரம் கண்களில் இருந்த மென்மையும் காதலும் விடை பெற, ஆழ்ந்த யோசனையுடன் அவளைப் பார்த்துக் கேட்டான் “வேறு யாரு?”. 

“ஓஹ் லெமன் ஆஹ்?” அவள் சொரூபனை அடிக்கடி அண்ணா என்று அழைப்பதால் அவன் ‘உன் அண்ணன்’ என்று சொன்னதை பெரிதாய் எடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் திடீரென அனுபவித்த இறுக்கமான அணைப்பும் அவன் மார்பின் கதகதப்பும் அவளை எங்கோ மேகமூட்டத்தினுல் பறக்க வைத்துக் கொண்டிருந்தது. 

உள்ளே போக முயன்றவளை மணிக்கட்டில் பிடித்து நிறுத்தினான் நிஷாந்தா.

‘என்ன’ என்பது போல் பார்த்து வைத்தாள் ஜானகி. 

இத்தனை நாள் கண் முன் நின்றது யதீந்திரா வளர்த்த பெண் ஜானகி… 

இப்போதே நண்பனின் தங்கை… 

அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான் நிஷந்தா. காதலை சொல்ல வரும் நேரம் இப்படி ஒரு குழப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. 

“உள்ளே எது நடந்தாலும் நாங்கள் இருக்கிறோம் சரியா?” அவள் தலையை வருடிவிட்டவன் அப்படியே அனைத்துக் கொண்டான். 

‘இவனுக்கு என்ன நடந்தது. பொசுக் பொசுக் என்று கட்டிப் பிடிக்கிறான்’ மனதினுள் நினைத்தவள் அவன் சொல்வதில் எதுவும் புரியாத போதும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.  

எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டவன் “உள்ளே போவோம் வா” கை பிடித்து அழைத்து சென்றான்.  

உள்ளே சொரூபன் அசைய மறந்து சிலையாய் நின்றுவிட்டான். இனிமேல் பார்க்கவே முடியாது என்று நினைத்த அம்மா அவன் கண் முன்னே. 

“அம்மாடி தர்ஷி” என்று முகத்தை தடவிய கண்மணியையோ, “தர்ஷி” என்று நடுங்கும் கைகளால் தலையை வருடிய பாலாவையோ அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

‘ஜானகியை பற்றி எப்படி சொல்வது, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இன்னும் சிறிது நேரத்தில் அனைத்தும் தெரிந்து விடும், எப்படி சமாளிக்க போறேன்’. மெல்லிய பதற்றத்துடன் உள்ளே வந்த யதி பார்த்தது தன் உறவுகளுடனே கதைக்க பயந்து கொண்டிருந்த தர்ஷினியைதான். 

அவளைக் கண்டதும் பாலா, கண்மணி இருவரிடமிருந்தும் விலகி வந்தவர் கையைப் பிடித்துக் கொண்டு உரிமையாய் கேட்டார் “ஏனம்மா என்னை பார்க்க வீட்டுக்கு வரல”. 

சங்கடமான சிரிப்புடன் சொரூபனை நோக்கியவள் “இல்லத்துக்கு வராததை கேட்கிறீர்களா?” சமாளிக்க முயன்றாள். 

“அவர்களுக்கு கொஞ்சம் ஏலாது. இந்த மருந்துகளை கொடுக்க வேண்டும்” 

யதியின் குரல் சொரூபனின் காதுக்குள் ஒலித்தது. 

அவரை ஷோபாவில் இருத்தியவள் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள். 

இறுகிப் போய் நின்ற சொரூபனை கண்ணால் அழைக்க கீ கொடுத்த பொம்மை போல் அவளருகே மண்டியிட்டான். 

“மகன் ஞாபகம் இருக்கா?” சொரூபனை சுட்டிக் காட்டி பரிவாய் கேட்கவே “அவரைக் காணோம்” என்று உதட்டைப் பிதுக்கினார் அவர்.

அவர் முன்னே மண்டியிட்டிருந்த சொரூபன் தோளில் கை வைத்து “மகன்” என்றாள். 

வாட்ட சாட்டமாய் ஆறடி உயரத்திற்கு வளர்ந்திருந்த அவனை சந்தேகமாய் பார்த்து கூறினார் “அவர் சின்ன ஆள்”. 

“இப்ப வளந்திட்டார்” 

கொஞ்சம் யோசித்தவராய் கையை நீட்டி சொரூபனின் கன்னத்தை தொட அவர் கையை சேர்த்து பிடித்துக் கொண்ட சொரூபன் கண்ணில் இருந்து நீர் வழிய கதறலாய் அழைத்தான் “அம்மா”. 

மடியில் முகம் புதைத்தவன் தலையை கோதிவிட்டவர் மறந்திருந்தாலும், உள்ளிருந்த தாய் மனம் பதற “யதி, அழ வேண்டாம் என்று சொல்லும்மா” என்றார்

அவனோ அன்னை மடியில் இன்னமும் ஆழமாய் புதைந்தான். 

“அம்மா” அவனின் குரல் அவருள் ஒளிந்திருந்த அவன் தாயை லேசாய் தட்டி எழுப்ப அவன் தலையை வருடிவிட்டார் “ஞானா” உதடு நடுங்க அழைத்தார். 

அவர் அழைப்பில் சொரூபன் கண்ணீரால் மடி நனைந்தது. 

“என்ர பிள்ளைக்கு என்னடா நடந்தது? என்னையே அடையாளம் தெரியல” யதியின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணில் நீருடன் வினாவினார் கண்மணி. 

“என்ன நடந்தது எண்டு எனக்கும் தெரியாது அம்மம்மா. அவர் என்னிடம் வரும் போதே அவருக்கு நினைவில்லை. ஜானகியும் சிறு பெண் அவளுக்கும்…” 

அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விருக்கென எழுந்த சொரூபன் அவள் தோளை வலிக்கப் பிடித்து “ஜானகி… சொரூபி” உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேட்டான். 

லேசாய் தள்ளாடியவன் கண்ணில் தென்பட்ட வலியில் அவள் இதயமும் வலிக்க, மறைக்க வழியின்றி தலையை ஆட்டியவாறே உள்ளே வந்த ஜானகியை நோக்கினாள் யதிந்திரா. 

“சொரூபி” இரண்டே எட்டில் அணுகி அனைத்துக் கொண்டான். 

“லெமன்… இந்த மாத்…” நிசந்தா அணைத்ததை பற்றி அவனிடம் முறைப்பாடு செய்ய ஆரம்பித்தவள் அவன் தீடீர் அணைப்பிலும் வேறுபட்ட அழைப்பிலும் குழம்பிப் போய் நின்றாள். 

“லெமன் அண்ணா, நீ யாழ்ப்பாணம் போய் வந்ததில் இருந்து சரியே இல்ல. எனக்கு போன் எடுக்கல, உள்ளே வரும் போது என்னை பார்க்க கூட இல்ல. இப்ப என் பெயரையும் மறந்திட்ட” உதடு பிதுக்கி அவனைத் தள்ளிவிட்டாள். 

அவள் உச்சியில் முத்தமிட்டவன் “அண்ணா சொல்லுடா” மீண்டும் கண்ணில் நீர் கசியக் கேட்டான் “எப்படி உன்னை அடையாளம் காணமல் விட்டேன்” தன்னைத் தானே நொந்தவனை குழப்பமாய்  நோக்கினாள் ஜானகி. 

சற்றுப் பயத்துடன் யதியை பார்க்க அவளருகே வந்தவள் “உன்னோட அண்ணாவை கண்டு பிடித்துத் தாரேன் என்று சொன்னேனே ஞாபகம் இருக்கா?” தலையை வருடியவாறு கேட்க ஆர்வத்துடன் பார்த்தாள் ஜானகி. 

“உன்னோட லெமன் அண்ணாதான் உண்மையான அண்ணா” பாலாவை கை காட்டி “அவர்தான் உன் அப்பா”. 

அப்பா என்பவர் வெறுமே விந்துவை கொடுத்ததும் வேலை முடிந்தது என்று கை கழுவி விடுபவர் இல்லை. ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாய், ஆசானாய் முன் மாதிரியாய் இருக்கும் ஒருவர். அந்த விதத்தில் பாலாவை தவிர தகுதியான வேறு ஒருவரைப் பார்க்க முடியாது. எனவே தயக்கமின்றி பாலாவைக் கை காட்டிவிட்டாள் யதிந்திரா.

யோகேந்திரன் பற்றிய உண்மையை சொல்வதா வேண்டாமா என்று சொரூபனே முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட்டாள். 

“சொரூபி” நடுங்கும் கரங்களால் தன் பேத்தியின் கன்னம் வருட அவளோ யதியின் பின்னே ஒளிந்தாள். யதியோ களைப்புடன் ‘ஏதாவது செய்யுங்களேன்’ என்பது போல் நிஷாந்தவைப் பார்த்து வைத்தாள் . 

“ஜானு, இங்கே வா” மென்மையாய் அழைத்தான் நிஷாந்த. 

நீண்ட அவன் கையில் தயக்கமின்றி தன் கையை வைத்தாள் ஜானகி. 

கண்மணியை தர்சினி அருகே இருத்தி தானும் அருகே அமர்ந்தவன் “இவர்கள் உன்னோட லெமனின் அம்மம்மா” தான் சொன்னதை கிரகிக்க சற்று நேரம் கொடுத்தவன் “லெமன் உன்னை பற்றி சொல்லி உன்னைப் பார்க்க தான் வந்து இருக்கிறார்கள்” அவள் கையை தன் கையில் வைத்தவாறே கண்மணியை மெதுவாய் அறிமுகபடுத்தினான். 

ஆர்வமாய் பார்க்கவே அவளிடம் புன்னகையுடன் தலையசைத்தார் கண்மணி. 

“அப்ப நீங்க ஏன் லெமன் மாதிரி கலர்ல இல்ல?” அப்பாவியாய் விசாரித்து அனைவர் முகத்திலும் புன்னகையை வர வைத்தாள் ஜானகி.

அவளருகே மண்டியிட்ட சொரூபன் “ஏனென்றால் நான் தாத்தாவின் நிறம்”, அவன் இலகுவாய் கதைக்க முயன்றாலும் அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் இறுகி இருப்பது அருகே நின்ற யதிந்திராவிற்கு விளங்கவே செய்தது. 

“அப்ப இனி நீங்க அண்ணாவேதான் இல்லையா லெமன் அண்ணா. உங்களை லெமன் அண்ணா என்றே கூப்பிடுறேன்.” அவனிடம் சலுகையாய் கேட்டாள். 

“உன்னோட இஷ்டம்டா” மென்புன்னகையுடன் தலையை கலைத்து விட்டான். 

அவர்களிடமிருந்து சற்று விலகி டிரைவர் அங்கிளை அழைத்து சொன்னாள்  “அங்கிள், வேலைக்கு ஒரு ஆள் வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். இனி ஜானகி இங்கேயே தங்கிக் கொள்ளட்டும்”. அவர் சென்றதும் ஜெகதீஷ்க்கு அழைத்தால் ‘நீங்கள் அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை. தயவு செய்து மீண்டும் அழைக்கவும்’ என்றது கைபேசி. 

என்ன நடந்தது யோசனையுடன் வெளியே வந்தாள். வழமையாய் காரின் அருகே அல்லது தோட்டத்தின் அருகே காத்திருப்பான். இன்று என்ன நடந்தது.

கைபேசியில் எதையோ தீவிரமாய் கதைத்துக் கொண்டிருந்த நிஷாந்தவை பார்த்துக் கேட்டாள் “ஜெகதீஷ் எங்கே?” 

“இங்கேதான் இருப்பான் வர சொல்கிறேன்” அவள் கண்  பார்க்காமல் கூறியவன் அவசரமாய் உள்ளே சென்றான். 

விநோதமாய் அவனை நோக்கியவாறே உள்ளே வர அவளருகே வந்தால் ஜானகி. 

“இந்திரா அது வந்து” தயங்கியவாறே அருகே வந்து யதி போட்டிருந்த  டொப்பை பிடித்தாள். 

‘என்ன’ என்பது போல் பார்த்தவளிடம் “அது நான் இங்கேயே…” என்று அப்போதும் சிறு பயத்தில் தடுமாறினாள். இத்தனை நாள் யதி, தர்சினி, நிஷாந்த என்று அனைவரையும் பிரிந்து இருந்ததில் இப்போது போக மனமின்றி தவித்தவள் அங்கேயே இருக்க விரும்பினாள். 

அதே நேரம் அன்று யதி அடித்தது நினைவு வர சற்றே பயந்தாள். இதற்கு முதலும் யதி அதட்டியிருகின்றாள் மிரட்டியிருக்கிறாள் ஆனால் இது போல் எதிர்பாராமல் பலமாய் அடித்ததில்லை. 

“இது உன் வீடு. இங்கே இருக்க யார் அனுமதியும் தேவையில்லை” யதி பதில் சொல்வதற்குள் மிகமிகக் கடுமையாய் ஒலித்தது சொரூபனின் குரல்.

Similar Posts

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 11

    மொழி  – 11 ஊரடங்கு சட்டம் முடிய மகன்கள் மட்டும் போய் பழுதடைந்திருந்த அவரின் உடலுக்கு இறுதிக் காரியங்களை நடத்தி வந்திருந்தார்கள். அதன் பின்தான் மனிதர்களின் சுயரூபம் அவனுக்கு தெரியும் நாளும் வந்தது. அவன் ஐந்து மாமாக்களும் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் விட அவனைக் கொண்டாடியதில் வெறுப்பில் இருந்தவர்கள் சமயம் பார்த்து தந்தை வழிச் சொத்துகளை பிரித்து எடுத்துக் கொண்டனர். பாலநாதனின் கருணையில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தப்பிப் பிழைத்தது. இத்தனை நாட்கள் அம்மாவிடம் கனிவாய்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 22

    மொழி  – 22 “என்ன லக்கிக்கா” என்று பின் தங்கி நின்ற இலக்கியாவை விசாரித்தாள் கவிதா. “இல்ல, அந்த ஜானகி எங்கேயோ பார்த்த மாதிரி, அதான் எங்கே என்று யோசிக்கிறேன்” என்றாள் அரைகுறை கவனத்துடன். “இங்கே எப்படி பார்த்திருக்க முடியும்? அவையள் தான் இங்கே வந்ததேயில்லையே” “லக்கி” மேற் கொண்டு உரையாடல் செல்வதற்குள் உள்ளிருந்து கண்மணி அவர்களை அழைக்கவே இருவரும் உள்ளே சென்றார்கள். வீட்டிலேயே மத்தியான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க மணமக்களை அலங்கரித்த சோபாவில் இருத்தி…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 01

    அந்தக் கம்பனியின் ஐந்து மாடிகட்டிடத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றுதான் அந்த நிறுவனத்தின் புது முதலாளி பொறுப்பேற்க வருகின்றான். அனைத்தும் சுத்தமாகவும் டிசிப்ளினாகவும் இருக்க வேண்டும். அதோடு கொஞ்சம் கோபக்காரன் என்றும் கதை. அனைவரும் வாசலில் பூங்கொத்துடன் நிற்க ஒருத்தி மட்டும் தன் வேலைகளை கர்மசிரத்தையாய் செய்து கொண்டிருந்தாள். சரியாய் சொன்ன நேரத்திற்கு உள்ளே நுழைந்தது அவனின் கருப்பு நிற மெர்சிடிஸ்- மாய்ப எக்ஸ்லெரோ (Mercedes-Maybach Exelero). உள்ளேயிருந்து இறங்கினான் ஒருவன். கருநீல வெஸ்ட்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 12

    மொழி  – 12 “ஏஏய் உஉனக்கு எஎப்படி?” தடுமாறினார். “இங்கே வந்து ஆறாவது மாதமே உங்களின் சாயம் வெளுத்துவிட்டது. பெயர் கூட பொய்யில்லையா? சீ உங்களுக்காக என் அண்ணகளை எதிர்த்து… சாகும் வரை அப்பாவை நிம்மதியில்லாமால்….” பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவள் “அதுதான் அன்றே நீங்கள் கட்டிய தாலியை தந்து விட்டேனே, இப்போது என்ன?” கறாராகவே கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் பாலா. அன்று அங்கே என்ன நடந்தது என்று என்ன கேட்டும் அவள் சொல்லவில்லை. “என்னை மன்னிச்சிரு….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி 23

    மொழி  – 23 மூன்றாம் பிறை எங்கோ ஒளிந்து கொள்ள இலகுவான பருத்தி த்ரீ குவட்டர் டீசேர்ட்டில் நட்சத்திர வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் யதி. இரவு நேரத்தின் குளிர்ந்த தென்றல் உடலை தழுவிச் செல்ல மெதுவாய் சிலிர்த்தாள். சற்று முன்தான் கவிதா லக்கி இருவரும் அலங்காரத்தை கலைத்து தலை காய வைக்க உதவி செய்து சென்றிருந்தார்கள். புது பெண்ணிற்கான எதிர்பார்ப்பு, தயக்கம், நாணம் என்று இல்லாத போதும் மனதின் ஓரம் ஏதோவொரு மெல்லிய எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 02

    கழுத்துக்கு கீழ் வரை போர்த்தியிருந்த போர்வையை கைகளால் பிடித்தபடியே புரண்டு படுக்க, அருகே அவன் படுத்திருந்த இடம் மெல்லிய கதகதப்புடன் காலியாய் இருந்தது. சோர்வுடன் நிமிர்ந்து பார்க்க டவலை மட்டும் இடையில் அணிந்து வெறும் மேலில் நீர்த்துளிகள் மின்ன சுவற்றிக்கு பதில் கண்ணாடி பதிக்கபட்ட ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன். அவன் முதுகில் இருந்த சிவந்த கோடுகள் அவர்கள் இருவரும் சற்று முன் இருந்த இரண்டறக் கலந்த நிலையை தெளிவாக எடுத்துரைக்க கன்னங்கள் சிவப்பேற…

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன