இதயம் முழுதும் அவன் மொழி – 13
மொழி – 13 கதவருகே நிழலாட போய்க் கதவைத் திறந்தான் சொரூபன். வெளியே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் யதீந்திரா. உணர்ச்சியற்றிருந்த அவன் கண்களில் கண நேரம் ஆச்சரியம் வந்து போக வழி விட்டு விலகி நின்றான். ‘இன்று பின்னேரம் தானே டிக்கெட் வெட்டுவதாக சொன்னார்கள்’ புருவம் நெரித்து யோசித்தான். பின்னேரம் அங்கே சொல்லும் எண்ணமே இல்லை அவனுக்கு. ஆனாலும் மருத்துவமனையில் இருந்து தனியாய் வந்ததை பார்க்க ஏதோ போலிருந்தது. உள்ளே வந்தவள் உடைகளை எடுத்துக் கொண்டு வாஷ்ரூம்…
