• |

    இதயம் முழுதும் அவன் மொழி – 15

    மொழி  – 15 சிலவேளை ஏதாவது தவறான புரிதல் இருந்திருந்தால்… யார் மீது தவறோ இல்லையோ! உனக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருக்கும் பெண்ணை இழந்துவிடாதே. மாறன் சென்று வெகு நேரமாகியும் உள்ளே செல்லாமல் நின்றவன் மனதினுள் நிஷாந்தாவின் வார்த்தைகளே ஒலித்தது. சென்னை வந்து பள்ளிகூடத்தில் சேர்ந்த போது இருவரும் ஒரே வகுப்பில்தான் படித்தார்கள். அவன் தமிழிலும் அவனிலும் மயங்கி கை கொடுத்தவள்தான் இன்று வரை அந்த மயக்கம் தீரவே இல்லை. சொரூபன் அதை  நன்றாகவே அறிந்திருந்தான்….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 13

    மொழி  – 13 கதவருகே நிழலாட போய்க் கதவைத் திறந்தான் சொரூபன். வெளியே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் யதீந்திரா. உணர்ச்சியற்றிருந்த அவன் கண்களில் கண நேரம் ஆச்சரியம் வந்து போக வழி விட்டு விலகி நின்றான். ‘இன்று பின்னேரம் தானே டிக்கெட் வெட்டுவதாக சொன்னார்கள்’ புருவம் நெரித்து யோசித்தான். பின்னேரம் அங்கே சொல்லும் எண்ணமே இல்லை அவனுக்கு. ஆனாலும் மருத்துவமனையில் இருந்து தனியாய் வந்ததை பார்க்க ஏதோ போலிருந்தது. உள்ளே வந்தவள் உடைகளை எடுத்துக் கொண்டு வாஷ்ரூம்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 12

    மொழி  – 12 “ஏஏய் உஉனக்கு எஎப்படி?” தடுமாறினார். “இங்கே வந்து ஆறாவது மாதமே உங்களின் சாயம் வெளுத்துவிட்டது. பெயர் கூட பொய்யில்லையா? சீ உங்களுக்காக என் அண்ணகளை எதிர்த்து… சாகும் வரை அப்பாவை நிம்மதியில்லாமால்….” பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவள் “அதுதான் அன்றே நீங்கள் கட்டிய தாலியை தந்து விட்டேனே, இப்போது என்ன?” கறாராகவே கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் பாலா. அன்று அங்கே என்ன நடந்தது என்று என்ன கேட்டும் அவள் சொல்லவில்லை. “என்னை மன்னிச்சிரு….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 11

    மொழி  – 11 ஊரடங்கு சட்டம் முடிய மகன்கள் மட்டும் போய் பழுதடைந்திருந்த அவரின் உடலுக்கு இறுதிக் காரியங்களை நடத்தி வந்திருந்தார்கள். அதன் பின்தான் மனிதர்களின் சுயரூபம் அவனுக்கு தெரியும் நாளும் வந்தது. அவன் ஐந்து மாமாக்களும் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் விட அவனைக் கொண்டாடியதில் வெறுப்பில் இருந்தவர்கள் சமயம் பார்த்து தந்தை வழிச் சொத்துகளை பிரித்து எடுத்துக் கொண்டனர். பாலநாதனின் கருணையில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தப்பிப் பிழைத்தது. இத்தனை நாட்கள் அம்மாவிடம் கனிவாய்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 10

    மொழி  – 10 சொரூபனின் உலகம் ஒரு கணம் நின்றுவிட்டது. அவன் பின்னால் வந்த நிஷாந்த “காரில் ஏற்று ஹோஸ்பிடல் போவோம்” என்று காரை ஸ்டார்ட் செய்யவும் அவளை தூக்கிக் கொண்டு பின் சீட்டில் ஏறினான் சொரூபன். டிரைவ் செய்தாவாறே முன் கண்ணாடி வழியே நோக்கியவனுக்கு அசைவின்றி அவளையே வெறித்துப் பார்த்த நண்பனின் மனநிலை தெளிவாகவே புரிந்தது. “இடியட்” வாய்க்குள் முனகினான். அவசர சிகிச்சை பிரிவுக்குள் அனுப்பி விட்டு முன்னே போட்டிருந்த சேரில் சாய்ந்தான் சொரூபன். உடலில்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 09

    மொழி  – 09 “நீங்கள் எப்போது யாழ்ப்பாணம் போறீங்க?” மீட்டிங் முடிந்து அனைவரும் போயிருக்க சொரூபனும் நிஷாந்தவும் அவளும் மட்டுமே இருந்தார்கள். கடந்த இரண்டு நாளாய் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருகிறாள். “நீர் வாறீரா?” அவளையே அழுத்தமாய் பார்த்துக் கேட்க மறுத்து தலையசைத்தவள் எழுந்து வெளியே சென்றுவிட்டாள். இரு ஆண்களுமே அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர். ‘யாழ்பாணம் வர ஏன் தயங்குகிறாள்’ இருவர் மனதிலும் ஒரே கேள்வி. “ஏன் போகவில்லை?” நிஷாந்த கேட்க “ச்சு அம்மம்மா இன்றும் கூட…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 08

    மொழி  – 08 அன்றிரவு திரும்பி வந்த போது அவளுக்கு ஃபிவேர் நூற்றிரெண்டில் நின்றது. மருத்துவரை அழைத்து மருந்து கொடுங்கள் என்று விட்டு தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டான். வேலை முடித்து வந்தவன் கட்டிலில் வாடிய மலராய் படுத்திருந்தவளைப் பார்க்க மனசாட்சி திட்டியது ‘சற்று அதிகமாய் படுத்திவிட்டாய், பாய்ந்து வைத்திருகிறாய்’ அடுத்த சில நாட்களுக்கு அவளை தொல்லை செய்யவில்லை. யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் கலைந்தவன் “யெஸ் கம்மின்” என்றதும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 07

    மொழி  – 07 மூன்றரைக்கு ஃபோன் அலராம் அடிக்க லேசாய் புரண்டவன் கைகளில் ஏதோ கதகதப்பாய் தட்டுபட என்னவென்று பார்த்தான். கன்னத்தில் கண்ணீர் கறையுடன் யதீந்திரா. குழந்தை போலிருந்த முகத்தைப் பார்த்தவன் உடல் எஃகாய் இறுகியது. நேற்று இரவே கைபேசி மூலம் அவனுக்கு அனைத்து தகவல்களும் வந்திருந்தது. அவள் தன் மாமா யோகேஸ்வரனிடம் என்ன கதைத்தால் என்பது தொடங்கி இங்கே எப்படி எப்போது வந்து சேர்ந்தாள் என்பது வரை ஏளனமாய் சிரித்தான் “என் குழந்தையை சுமக்க வேண்டுமா?…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 06

    மொழி  – 06 அதிர்ந்து போய் கண் விரித்துப் பார்த்துக் கொண்டு நின்றவளை ஏளனமாய் பார்த்தான் சொரூபன் “உன் குணம் மாறவேயில்லை இல்லையா? நீ நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் போவாய் இல்லையா?” வெறுப்பா வேதனையா என்று விளங்காத குரலில் கேட்டான். அவனிடமிருந்து திரும்பி நின்றவள் கண்களை மூடி ஆழ மூச்செடுத்து “எனக்கு மூன்று நாட்கள் டைம் வேண்டும்” என்றாள். “ஏன் மூன்று நாட்கள்” கேள்வியாய் பார்த்தவன் எதையோ வெளிப்படையாய் கேட்க தயங்கினான். அவன் யோசனை செல்லும்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 05

    மொழி  – 05 மௌனமாக நிற்க மீண்டும் அதட்டினான் “ஜானகி யார் என்று கேட்டேன்?”. அவன் அதட்டலில் வெளிப்படையாக உடல் நடுங்குவதை ஆச்சரியத்துடன் கவனித்தான் சொரூபன். அவனுக்கு தெரிந்து யதீந்திரா மிகவும் தைரியசாலி. ‘சிறு அதட்டலுக்கு ஏன் பயபடுகிறாள்’ யோசனையாய் நோக்கினான். “அஅந்த அன்டியின் மகள்” “நான் கடத்திய வயதான பெண்மனியா?” புருவத்தை உயர்த்த ஆமோதிப்பாய் தலையாட்டினாள். “ஒஹ்” “அவர்கள் இருவருக்கும் தெரியாது. இப்போதைக்கு சொல்ல வேண்டாம்” “ஏன்? அதெப்படி தெரியமால் போகும்?” “அவளுக்கு சிறு வயதாய்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 04

    மொழி  – 04 சம்பால் நிற பிஎம்டபிள்யூ BMW I3 சீறிக் கொண்டு வந்து பத்து மாடி கட்டிடத்தின் முன் நிற்க, அதிலிருந்து இறங்கினான் ஜிஎம்எஸ் என்று அழைக்கபடும் ஞான மந்திர சொரூபன். அவனுகென்றே அளவெடுத்து தைக்கப்பட்ட சாம்பல் வண்ண Reymond சூட்டில் கருப்பு நிற சேட்டுடன் நீண்ட கால்களை அகட்டி வைத்து நடக்க பின்னால் வருபவர்கள் ஓட வேண்டி இருந்தது. “பொஸ்” என்றவாறு அருகே வந்தான் ஜெகதீஸ் “ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் ரெடி எல்லோரும் வந்திருக்கீனம்….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 03

    மொழி  – 03 “நீதான் வேண்டும்” அவன் உடல் நடுங்குவது வெளிப்படையாகவே தெரிந்தது. “என்ன” அதிர்ச்சியுடன் கேட்டவள், ஆச்சரியத்துடன் அவன் உடலும் நடுங்குவதைக் கவனித்தாள். அவன் மீதே அவனுக்கு எரிச்சல் வர அதை அவளிடம் காட்டினான் “உமக்கு காது கேட்குமா இல்லையா?” இன்று அவள் அவனை விட்டுப் போகக் கூடாது. வேறு வழியே இல்லையா என்றால், இருக்கு. ஆனால் இதற்காகதானே இத்தனை காலம் காத்திருந்தான். அனைத்தையும் செய்து முடித்தான். காலம் கூடி வரும் வேளையில் இந்த மனம்…