Romance

Love and & Romance Stories are here to read

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 19

    மொழி  – 19 சொரூபன் தான் வேகமாய் முதலில் மேலே சென்றான். உள்ளே யதீந்திரா கனவில் எதையோ கண்டு எழுந்து நின்று கையை அழுத்தி துடைத்துக் கொண்டிருந்தாள். “என்னடி என்ன?” பயத்துடன் லைட்டை போட்டான். “இரத்தம் போக மாட்டேன் என்கிறது” வெறுங்கையை அவன் முன் நீட்டி காட்டியவள் குளியலறை செல்ல முயல அவளை தடுத்து நிறுத்தி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான், “நான் துடைத்து விடுகிறேன் போய் விடும்” கைகளுக்குள் வைத்தவாறே அவள் கையிலிருந்த துவாயை வாங்கி துடைத்து…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 18

    மொழி  – 18 வெகு நேரம் யோசித்து விட்டு விடிகாலைப் பொழுதிலேயே கண்ணயர்ந்தது அடுத்த நாள் நேரம் கழித்தே எழுந்திருந்தான் சொரூபன். அவன் எழுந்ததைப் பார்த்து விட்டு கொக்கோ பவுடர் போட்டு பால் கலந்து கொண்டு வந்தாள் யதி. அதை வாங்கியவன் பெருவிரலால் கன்னம் வருடிக் கேட்டான் “யூ ஒகே”. “ம்ம்” சிறு குன்றலுடன் தலை குனிய “இதில் என்ன இருக்கு” மெலிதாய் அணைத்துக் கொண்டான். “சாப்பிட்டீரா?” கண்கள் மின்ன தலையாட்டினாள் “அவங்க ஏதோ மா மாதிரி…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 17

    மொழி  – 17 மாடியில் இருந்து கீழே தோட்டத்தில் எதையோ வெட்டிக் கொத்திக் கொண்டிருந்த சொரூபனையே வைத்த கண் எடுக்கமால் பார்த்துக் கொண்டிருந்தாள் யதி. இரண்டு நாளைக்கு முன்தான் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். கொழும்பில் விமான நிலையத்தில் இறங்கி ஒரு பதினைந்து மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு பிளாட்டிற்கு அழைத்து சென்றவன் “இங்கே ரெஸ்ட் எடும் எனக்கு கொஞ்ச வேலைகள் இருக்கு” என்று விட்டு அதிகாலை சென்றவன்தான் மீண்டும் வந்த போது நடுசாமம் தாண்டியிருந்தது. இடையில் நடுத்தர வயது…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 16

    மொழி  – 16 “எப்படி இருக்கு பிங்கி மாத்தையா?” லெகனவை விரித்து பிடித்தபடி தன்னைத் தானே சுற்றிக் காட்டினாள் ஜானகி. இருவரும் அந்த நட்சத்திர ஹோட்டலின் சிறு ஹோலுக்கு செல்லும் வழியில் நின்றிருந்தார்கள்.    “லஸ்ஸனாய்” என்றவன் பார்வை ஒரு கணம் மாற, மாற்றத்தை கண்டு கொண்டு மீண்டும் தயங்கினாள் அவள். அவளருகே நெருங்கி வந்த நிஷாந்த பான்ட் பொக்கேடினுள் கையை விட்டவாறே சற்றுக் குனிந்து “யமு” என்றான் அறையைக் கண்ணால் காட்டி. அவன் வாசம் நாசியை…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 14

    மொழி  – 14 ‘அவன் கண் முன்னே தான் கதைத்தாள். ஆனால் அவளின் சிம் கார்டில் இருந்து உள்வந்த வெளிச்சென்ற எந்த அழைப்பிலும் அந்த இலக்கம் இல்லை. அப்படியானால் அவனுக்கும் தெரியாத இன்னொரு இலக்கம் அவளிடம் இருக்கு. அதை எப்படி கண்டு பிடிப்பது. இன்று வீட்டுக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்கள் வந்திருந்தது. அனைவரும் தமிழ் நாட்டின் மிகப் பெரிய கம்பெனி ஒன்றில் உயர் பதவியில் இருப்பவர்கள். அவளிடம் பணிவுடன் நடந்ததை வீடியோவாக எடுத்து அனுப்பியிருந்தான் அவனின்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 15

    மொழி  – 15 சிலவேளை ஏதாவது தவறான புரிதல் இருந்திருந்தால்… யார் மீது தவறோ இல்லையோ! உனக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருக்கும் பெண்ணை இழந்துவிடாதே. மாறன் சென்று வெகு நேரமாகியும் உள்ளே செல்லாமல் நின்றவன் மனதினுள் நிஷாந்தாவின் வார்த்தைகளே ஒலித்தது. சென்னை வந்து பள்ளிகூடத்தில் சேர்ந்த போது இருவரும் ஒரே வகுப்பில்தான் படித்தார்கள். அவன் தமிழிலும் அவனிலும் மயங்கி கை கொடுத்தவள்தான் இன்று வரை அந்த மயக்கம் தீரவே இல்லை. சொரூபன் அதை  நன்றாகவே அறிந்திருந்தான்….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 13

    மொழி  – 13 கதவருகே நிழலாட போய்க் கதவைத் திறந்தான் சொரூபன். வெளியே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள் யதீந்திரா. உணர்ச்சியற்றிருந்த அவன் கண்களில் கண நேரம் ஆச்சரியம் வந்து போக வழி விட்டு விலகி நின்றான். ‘இன்று பின்னேரம் தானே டிக்கெட் வெட்டுவதாக சொன்னார்கள்’ புருவம் நெரித்து யோசித்தான். பின்னேரம் அங்கே சொல்லும் எண்ணமே இல்லை அவனுக்கு. ஆனாலும் மருத்துவமனையில் இருந்து தனியாய் வந்ததை பார்க்க ஏதோ போலிருந்தது. உள்ளே வந்தவள் உடைகளை எடுத்துக் கொண்டு வாஷ்ரூம்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 12

    மொழி  – 12 “ஏஏய் உஉனக்கு எஎப்படி?” தடுமாறினார். “இங்கே வந்து ஆறாவது மாதமே உங்களின் சாயம் வெளுத்துவிட்டது. பெயர் கூட பொய்யில்லையா? சீ உங்களுக்காக என் அண்ணகளை எதிர்த்து… சாகும் வரை அப்பாவை நிம்மதியில்லாமால்….” பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவள் “அதுதான் அன்றே நீங்கள் கட்டிய தாலியை தந்து விட்டேனே, இப்போது என்ன?” கறாராகவே கேட்டாள். இன்பமாய் அதிர்ந்தான் பாலா. அன்று அங்கே என்ன நடந்தது என்று என்ன கேட்டும் அவள் சொல்லவில்லை. “என்னை மன்னிச்சிரு….

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 11

    மொழி  – 11 ஊரடங்கு சட்டம் முடிய மகன்கள் மட்டும் போய் பழுதடைந்திருந்த அவரின் உடலுக்கு இறுதிக் காரியங்களை நடத்தி வந்திருந்தார்கள். அதன் பின்தான் மனிதர்களின் சுயரூபம் அவனுக்கு தெரியும் நாளும் வந்தது. அவன் ஐந்து மாமாக்களும் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் விட அவனைக் கொண்டாடியதில் வெறுப்பில் இருந்தவர்கள் சமயம் பார்த்து தந்தை வழிச் சொத்துகளை பிரித்து எடுத்துக் கொண்டனர். பாலநாதனின் கருணையில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தப்பிப் பிழைத்தது. இத்தனை நாட்கள் அம்மாவிடம் கனிவாய்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 10

    மொழி  – 10 சொரூபனின் உலகம் ஒரு கணம் நின்றுவிட்டது. அவன் பின்னால் வந்த நிஷாந்த “காரில் ஏற்று ஹோஸ்பிடல் போவோம்” என்று காரை ஸ்டார்ட் செய்யவும் அவளை தூக்கிக் கொண்டு பின் சீட்டில் ஏறினான் சொரூபன். டிரைவ் செய்தாவாறே முன் கண்ணாடி வழியே நோக்கியவனுக்கு அசைவின்றி அவளையே வெறித்துப் பார்த்த நண்பனின் மனநிலை தெளிவாகவே புரிந்தது. “இடியட்” வாய்க்குள் முனகினான். அவசர சிகிச்சை பிரிவுக்குள் அனுப்பி விட்டு முன்னே போட்டிருந்த சேரில் சாய்ந்தான் சொரூபன். உடலில்…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 09

    மொழி  – 09 “நீங்கள் எப்போது யாழ்ப்பாணம் போறீங்க?” மீட்டிங் முடிந்து அனைவரும் போயிருக்க சொரூபனும் நிஷாந்தவும் அவளும் மட்டுமே இருந்தார்கள். கடந்த இரண்டு நாளாய் ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருகிறாள். “நீர் வாறீரா?” அவளையே அழுத்தமாய் பார்த்துக் கேட்க மறுத்து தலையசைத்தவள் எழுந்து வெளியே சென்றுவிட்டாள். இரு ஆண்களுமே அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர். ‘யாழ்பாணம் வர ஏன் தயங்குகிறாள்’ இருவர் மனதிலும் ஒரே கேள்வி. “ஏன் போகவில்லை?” நிஷாந்த கேட்க “ச்சு அம்மம்மா இன்றும் கூட…

  • |

    இதயம் முழுதும் அவன் மொழி – 08

    மொழி  – 08 அன்றிரவு திரும்பி வந்த போது அவளுக்கு ஃபிவேர் நூற்றிரெண்டில் நின்றது. மருத்துவரை அழைத்து மருந்து கொடுங்கள் என்று விட்டு தன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டான். வேலை முடித்து வந்தவன் கட்டிலில் வாடிய மலராய் படுத்திருந்தவளைப் பார்க்க மனசாட்சி திட்டியது ‘சற்று அதிகமாய் படுத்திவிட்டாய், பாய்ந்து வைத்திருகிறாய்’ அடுத்த சில நாட்களுக்கு அவளை தொல்லை செய்யவில்லை. யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் கலைந்தவன் “யெஸ் கம்மின்” என்றதும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது…